இறுதி வரை பார்த்தால், சத்தியமா புரோட்டா சாப்பிடவே மாடீங்க - பயனுள்ள பதிவு
ஒரு காலத்தில் புரோட்டா என்றால் தமிழ்நாட்டில் யாருக்குமே தெரியாது. 1980-ம் ஆண்டு தான் நமது தமிழகத்தில் அடியெடுத்து வைத்தது. அப்போதெல்லாம் பெரிய நகரங்களில் உள்ள ஓட்டல்களில் மட்டுமே புரோட்டா கிடைக்கும். மக்கள் அந்த நகரங்களுக்கு சென்றால் புரோட்டா சாப்பிடாமல் ஊர் திரும்ப மாட்டார்கள் . மட்டன் அல்லது சிக்கனை புரோட்டாவோடு கலந்து சாப்பிடும் போது, அந்த ருசி மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த ருசிக்கு நமது அனைவரின் நாக்கு அடிமையாகி போனதால் எல்லோரும் புரோட்டாவை அதிகமாக சுவைக்க தொடங்கினர், இப்போது பட்டி தொட்டி எல்லாம் புரோட்டா கடையாக அதிகமாகி விட்டது.
இப்போது பலபேர் இரவில் 4 புரோட்டா சாப் பிட்டால் தான் சாப்பிட்டது போல் இருக்கிறது என்கின்ற நிலைமை வந்துவிட்டது. ஆனால், இந்த புரோட்டா உங்கள் உடலையே பதம் பார்க்கிறது என்பது உங்களுக்கே தெரியாது. பல உடல் நோய்களுக்கு இந்த புரோட்டாதான் காரணமாக இருக்கிறது. மனிதன் சாப்பிடுவதற்கு கூட லாயக்கற்ற பொருளான மைதா மாவினால் இந்த புரோட்டா தயார் செய்யப்படுகிறது. இதை குறித்தது கீழே உள்ள வீடியோவில் ஒரு பெரியவர் தெளிவாக கூறிஉள்ளார்.கண்டிப்பாக பார்த்து பயனடையுங்கள்.

Comments
Post a Comment