தனி ஒரு ஆளாக 2000 பேரை காப்பாற்றிய இந்திய சிறுமி நீங்களே பாருங்க



திரிபுரா மாநிலம் தன்சேறா பகுதியை சேர்ந்த சிறுமி சோமதி என்கிற 9 வயது பழங்குடி இன சிறுமி. இந்த சிறுமியின் குடும்பத்தினர் அந்த பகுதிகளில் விறகுக்காக மூங்கில் வெட்டி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது அந்த மாநிலத்தில் பெய்துவரும் அதிக மழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவுகளால் அந்த மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில், கடந்த 15-ம் தேதி சிறுமி சுமதி தனது தந்தையுடன்  தன்சேராவில் உள்ள ஒரு மலைப்பகுதியில் மூங்கில் சேகரிப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அந்த வழியாக தரம் நகரிலிருந்து பயணிகள் ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது  ரயில் வரும் பகுதியில் கடும் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளம் மண்ணால் மூடிக் கிடந்தது. இதனை பார்த்த சிறுமி தன் தந்தையிடம் போய் கூற , இருவரும் சேர்ந்து. ரயில் முன்பு நின்று அவரது சட்டையைக் கழற்றி அசைத்துக் காட்டியுள்ளனர். அதைப்பார்த்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டு, அந்த ரயில் பயணம் செய்த 2000 க்கும் மேட்பட்ட   பயணிகள் சிறுமியால் காப்பாற்றப்பட்டனர்.

இதையடுத்து அந்த  சிறுமியையும்  அவளது தந்தையையும் பொது மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். திரிபுரா மாநில சுகாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்  சுதிப் ராய் பர்மன், சிறுமி மற்றும் அவரது தந்தையை  அழைத்து பாராட்டி விருந்தும் வைத்தார்,

மேலும் அந்த சிறுமியின் தந்தைக்கு ரெயில்வே துறையில் பணி வழங்க பரிந்துரைக்கவும்  திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Comments