ஒருநாள் போட்டியில் 481 ரன்கள் அடித்து உலகசாதனை படைத்த இங்கிலாந்து
இங்கிலாந்து அணி தனது பழைய சாதனையை (444 ரன் ஒருநாள் போட்டி) நேற்றைய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 481 ரன்கள் அடித்து சாதனை படைத்தது.
கடந்த 2016ல் பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி நாட்டிங்ஹாம் மைதானத்தில் 444 ரன்கள் அடித்து உலக சாதனை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அதே பழைய சாதனையை படைத்த மைதானத்தில் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் எடுத்து பழைய உலக சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த அனைத்து பந்து வீச்சாளர்களின் பந்துக்களையும் நாலாபுறமும் சிதறடித்தனர் இங்கிலாந்து வீரர்கள். இதை வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment